/tamil-ie/media/media_files/uploads/2019/03/whatsapp..jpg)
state bank of india zero balance account
state bank of india zero balance account : எஸ்.பி வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் என்ன நடக்கும் வீணாக அதற்கு அபராத கட்டணம் கட்டி அழ வேண்டும்.
BSBD அக்கவுண்ட் பற்றி தெரியுமா?
BSBD வங்கிக் கணக்கு மூலம் தற்போது ஜீரோ பேலன்ஸ் (Zero Balance Account) அக்கவுண்ட் ஓப்பன் செய்வது சுலபம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற அக்கவுண்ட்டை ஓப்பன் செய்தால் எவ்வித குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவை இல்லை மற்றும் அதிகபட்ச தொகையாக வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
மேலும் மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு எப்படி டெபிட் கார்ட் (Debit Card) உண்டோ அதேப்போல் இவ்வங்கிக் கணக்கிற்கும் உண்டு. இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை மற்றும் ஆன்லைன் பணபரிவர்தனைக்கு (online transaction) எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
மகிழ்ச்சியான தகவல்! எஸ்பிஐ ஏடிஎம்-மில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை
காசோலையை (Check) டெபாசிட் செய்தாலும், அதனை பணமாக மாற்றினாலும் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை மற்றும் மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் சிறப்பாக இந்த வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி வரை இருப்பு வைத்திருந்தால், வருடத்திற்கு ரூ 3.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.