எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பலருக்கும் இந்த தகவல் தெரிந்ததே. ஆனால் மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தகவலை தெரிந்துக் கொள்வது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமில்லை நீங்கள் எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டால் இதைவிட சிறந்த திட்டம் இருக்க முடியாது.
குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத (zero balance) ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கு குறித்த விவரம் தான் அது. சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் அதில் எவ்வளவு ரூல்ஸ் இருக்கு என்பது அனைவருக்கும் தெரியும். கூடவே குறிப்பிட்ட தொகை கட்டாயம் மினிமல் பேலன்ஸாக இருக்க வேண்டும். ஆனால் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் இந்த தொல்லையே இல்லை.
இந்த விதிமுறைகள் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் என வங்கிக்கு ஏற்ப மாறுபடும்.ஜீரோ பேலன்ஸ் கணக்கில் எந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கலாம். அதே போல் மினிமல் பேலன்ஸ் தேவையும் இல்லை.
எப்படி தொடங்குவது?
1. அடிப்படை ஆதாரங்கள் போதுமானது.
2. தனியாகவும், இரண்டு பேர் சேர்ந்தும் ஜாய்ண்ட் அக்கவுண்ட் வசதியும் உள்ளது. இதில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலே போதும்.
3. ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 3.25 சதவீதம் வட்டி. அதே சமயம் இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட மாட்டாது.
4. அடிப்படை விதிமுறை மற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது.
5. மாதம் 4 முறை பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த 4 முறையில் ஏடிஎம்-யில் பணம் எடுப்பதும் அடங்கும். ஏடிஎம் கார்டு வழங்கப்படும்.