எஸ்பிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்… டெபிட் கார்டு தேவையில்லை!

இந்த வசதியை பெற யோனோ கேஷ் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

By: Updated: July 28, 2020, 12:20:38 PM

state bank of indian atm card sbi atm : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க பெருமளவில் ஆர்வம் காட்டி வருகிறது. டெபிட் கார்டுகளுக்கு கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைத்து விடும். டெபிட் கார்டுகளை பயன்பாட்டிலிருந்து நீக்க திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைவான அளவுக்கு மட்டுமே பிளாஸ்டிக் கார்டுகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

டெபிட் கார்டுக்கு மாற்றாக யோனோ (Yono) மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளம் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை எஸ்பிஐ ஊக்குவித்து வருகிறது.

அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளம்தான் யோனோ. ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் ஐபோன் போன்களுக்கு பிரத்யேகமாக எஸ்பிஐ யோனோ மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளன.//www.sbiyono.sbi என்ற இணையதளமும் உள்ளது.

இவற்றின் மூலம் கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள்,வீட்டுக்கடன்,கல்விக்கடன்,வாகனக்கடன் போன்றவற்றை எளிதாகப் பெறலாம். புதிய கணக்கு தொடங்குவதற்கு வசதி உள்ளது.பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பவது போன்ற பொதுவான பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.

நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம்.ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.ஏடிஎம் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை இந்தியாவில் முதன் முறையாக ஸ்டேட் வங்கி நடைமுறைபடுத்தியுள்ளது.

ஆவணங்கள் இன்றி 1 லட்சம் வரை பர்சனல் லோன் கொடுக்கும் பிரபல வங்கி!

இந்த வசதியை பெற யோனோ அப்ளிகேஷனில் உள்ள யோனோ பே (Yono Pay) பகுதிக்குச் சென்று யோனோ கேஷ் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஏடிஎம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:State bank of indian atm card sbi atm card state bank atm card sbi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X