state bank online : கூகுள் பே, பேபால், பேடிஎம்களின் வருகைக்கு முன்பு வங்கி கணக்குகளில் இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யவேண்டும் என்றால் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் மூலம்தான் செய்யவேண்டும்.
நெஃப்ட்
வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 முதல் 6.30 மணி வரை செய்யமுடியும். வங்கி நேரங்களுக்குப் பின் செய்தால் பரிவர்த்தணை அடுத்த வேலை நேரத்தில்தான் நடைபெறும். அதாவது இன்று பணம் செலுத்தினால், அடுத்த நாள்தான் பரிவர்த்தனை நிறைவடையும். ஒருவர் வாரத்திற்கு 11 முறை நெஃப்ட் மூலம் பணம் அனுப்பலாம். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நெஃப்ட் மூலம் பணம் அனுப்ப முடியாது.
ஆர்டிஜிஎஸ்
இதுவும் நெஃப்ட் போன்றுதான். ஆனால் பரிவர்த்தனை உடனடியாக நடைபெறும். 2 லட்சத்திற்கு அதிகமான பணப்பரிவர்த்தனைகளை இதில் செய்யமுடியும். இந்த பணப்பரிவர்த்தனையையும் வாரநாட்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதிலும் 8 முதல் 4 மணி வரையில் மட்டுமே இந்த பரிவர்த்தனையை செய்யமுடியும்.
ஐஎம்பிஎஸ்
மற்ற இரண்டு முறைகளை விடவும் இது சிறந்தது. அனைத்து நாட்களிலும், எப்போது வேண்டுமானலும் இந்த வசதியை பயன்படுத்தலாம். உடனடியாக பணப்பரிவர்த்தனை நடைபெறும். ஒருவர் அதிகபட்சமாக 2 லட்சம் வரை ஐஎம்பிஎஸ் மூலம் பணத்தை அனுப்பலாம்.
இது சந்தோஷத்திற்கான நேரம் எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே!
இந்தப் பரிவர்த்தனைகளுக்கு பொதுவாக 2 ரூபாயிலிருந்து 55 ரூபாய் வரை சேவைக்கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த சேவைக்கட்டணங்கள் வங்கிகளை பொறுத்து வேறுபடும். தற்போது எஸ்பிஐ வங்கி இதற்கான சேவைக்கட்டணங்களை ரத்து செய்துள்ளது. இனி எந்தவித சேவைக்கட்டணமும் இன்றி பயனர்கள் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக ஜூலை ஒன்றாம் தேதி முதல் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக் கட்டணங்களை ரத்து செய்திருந்தது. தற்போது ஆகஸ்ட் 1 முதல் ஐஎம்பிஎஸ் சேவைக்கட்டணத்தையும் ரத்து செய்கின்றது. இது யோனோ, இண்டெர்நெட், மொபைல் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.