state bank sbi account sbi state bank of india : ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தால், கூடுதலாக இருக்கும் தொகை தானாகவே டெபாசிட் திட்டத்துக்கு மாறிக்கொள்ளும். சேமிப்பு கணக்கில் தொகை குறையும்போது பிக்ஸட் டெபாசிட்டிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு வந்துவிடும்.
இது சேவிங்ஸ் பிளஸ் கணக்கு. சேமிப்புக் கணக்கு மற்றும் பிளக்ஸி டெபாசிட் இரண்டிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கில் இருப்பு குறையும்போது பிளக்ஸி டெபாசிட்டிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு பணம் செல்லும். அதேபோல சேமிப்பில் உயர்ந்தாலும் டெபாசிட்டுக்கு பணம் மாறிவிடும்.எஸ்பிஐ வழங்கும் பிளக்ஸி டெபாசிட் கணக்கு குறித்து இங்கே பார்ப்போம், எஸ்பிஐ வலைத்தளத்தின்படி, ஒரே தவணையில் டெபாசிட் செய்யத் தேவையான தொகை ரூ.500. ஒரு நிதியாண்டில், எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.5,000 ஆகும். எனினும். எஸ்பிஐ பிளக்ஸி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வைப்பு ஒரு நிதியாண்டில் ₹ 50,000 ஆகும்.
இது பிளக்ஸி டெபாசிட் சேமிப்புக் கணக்கு. பல்வேறு வங்கிகளும் பிளக்ஸி டெபாசிட் திட்டத்தை வழங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு வங்கிகளும் சில தனிப்பட்ட விதிமுறைகளை வைத்துள்ளன. பிளக்ஸி டெபாசிட் கணக்கை எளிதாக தொடங்கிவிடலாம் என்பதும், தேவைப்படும் போது பணத்தை வெளியே எடுத்துவிடலாம் என்பதும் இந்த கணக்கில் உள்ள வசதி.
இதற்கான அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
இதற்கான அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. எஸ்பிஐ வழங்கும் பிளக்ஸி டெபாசிட் கணக்கு குறித்து இங்கே பார்ப்போம், எஸ்பிஐ வலைத்தளத்தின்படி, ஒரே தவணையில் டெபாசிட் செய்யத் தேவையான தொகை ரூ.500. ஒரு நிதியாண்டில், எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.5,000 ஆகும். எனினும். எஸ்பிஐ பிளக்ஸி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வைப்பு ஒரு நிதியாண்டில் ₹ 50,000 ஆகும்.
எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு காலம் 5 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் ஆகும். எஸ்பிஐ தற்போது ஒரு ஆண்டு மற்றும் ஏழு ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 6.25% வட்டி விகிதத்தை செலுத்துகிறது.
source: facebook
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”