state bank sbi savings : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. எஸ்பிஐ-யின் வாடிக்கையாளர் சேவை அனைவரையும் கவர்ந்த ஒன்று. அதே போல் வாடிக்கையாளர்கள் வசதிக்காவும் எஸ்பிஐ பல்வேறு சிறப்புதிட்டங்களையும் நடைமுறையில் வைத்துள்ளது.
Advertisment
சமீபத்தில் எஸ்பிஐ அறிவித்த வீட்டு கடன் திட்டம் தொடக்கி, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கும் தெரியாத கட்டண விவரத்தை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.
state bank sbi savings:செயலாக்க கட்டண விவரம்!
எஸ்பிஐயின் செயலாக்கக் கட்டணம் (processing fee). அதாவது எஸ்பிஐ வங்கி தனது வீட்டுக்கடன் திட்டங்களுக்கு செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
Advertisment
Advertisements
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தைக் குறைத்ததால் வங்கிகள் கடன் திட்டங்கள் மீது பெறும் வட்டியின் லாபம் குறைந்தது. அதன் காரணமாக இந்த செயலாக்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது. ஏற்கனவே அறிவித்திருந்த செயலாக்க கட்டணம் ரத்து என்ற அறிவிப்பு திரும்ப பெறுவதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது,