statebank account loan sbi account loan : எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக PMJDY திட்டத்தின் கீழ் கணக்கு ஆரம்பித்துள்ள வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு வசதியை நடைமுறையில் வைத்துள்ளது.
Advertisment
எந்த Jan Dhan கணக்கு வைத்திருப்பவரும் தனது கணக்கின் இருப்பை எளிதாக 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணுக்கு டையல் செய்வதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து இந்த எண்ணுக்கு அழைப்பு செய்ய வேண்டும். அழைப்பு செய்த பிறகு அவர்கள் இறுதியாக செய்த 5 பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களது கணக்கு இருப்பு தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். தவிர இந்த அனைத்து விவரங்களையும் 9223766666 என்ற எண்ணுக்கு தங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து அழைப்பு செய்வதன் மூலமும் தெரிந்துக் கொள்ளலாம்.
சமீபத்தில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்தது அதில் அறிவிக்கப்பட்ட மானிய தொகை நேரடியாக பயனாளிகளின் பிரதம மந்திரி Jan Dhan கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
இருப்பினும் பிரதம மந்திரி Jan Dhan கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது இருப்பை சரிபார்க்க முடியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வர்த்தக வங்கி என்பதால், அதிகப்பட்ச Jan Dhan கணக்குகள் எஸ்பிஐ-யில் வைக்கப்பட்டுள்ளன.
திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட பிரதம மந்திரி Jan Dhan கணக்கு பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மிக முக்கியமான நிதி சேர்க்கும் திட்டங்களில் ஒன்றாகும். பிரதம மந்திரி Jan Dhan கணக்கை எந்த வங்கி கிளையில் வேண்டுமானாலும் அல்லது Business Correspondent (Bank Mitr) outlet லும் திறக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் திறக்கப்படும் கணக்குகளை ஜீரோ பேலன்ஸ் உடன் திறக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil