Advertisment

அசத்தும் எஸ்பிஐ... சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

விதிமுறை மற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi mobile banking

sbi mobile banking

statebank net banking sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பலருக்கும் இந்த தகவல் தெரிந்ததே. ஆனால் மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தகவலை தெரிந்துக் கொள்வது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமில்லை நீங்கள் எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டால் இதைவிட சிறந்த திட்டம் இருக்க முடியாது.

Advertisment

குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத (zero balance) ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கு குறித்த விவரம் தான் அது. சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் அதில் எவ்வளவு ரூல்ஸ் இருக்கு என்பது அனைவருக்கும் தெரியும். கூடவே குறிப்பிட்ட தொகை கட்டாயம் மினிமல் பேலன்ஸாக இருக்க வேண்டும். ஆனால் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் இந்த தொல்லையே இல்லை.

இந்த விதிமுறைகள் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் என வங்கிக்கு ஏற்ப மாறுபடும்.ஜீரோ பேலன்ஸ் கணக்கில் எந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கலாம். அதே போல் மினிமல் பேலன்ஸ் தேவையும் இல்லை.

இப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்!

எப்படி தொடங்குவது?

1. அடிப்படை ஆதாரங்கள் போதுமானது.

2. தனியாகவும், இரண்டு பேர் சேர்ந்தும் ஜாய்ண்ட் அக்கவுண்ட் வசதியும் உள்ளது. இதில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலே போதும்.

3. ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 3.25 சதவீதம் வட்டி. அதே சமயம் இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட மாட்டாது.

4. அடிப்படை விதிமுறை மற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது.

5. மாதம் 4 முறை பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த 4 முறையில் ஏடிஎம்-யில் பணம் எடுப்பதும் அடங்கும். ஏடிஎம் கார்டு வழங்கப்படும்.

OnlineSBI சேவையை எவ்வாறு இயக்குவது?

எஸ்பிஐ யில் வங்கி கணக்கு உள்ள எவரேனும் SBI netbanking சேவைக்கான கோரிக்கையை எழுப்பலாம். முதல் முறை உள்நுழைய பயன்படும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல் அடங்கியுள்ள ஒரு Pre Printed Kit (PPK) ஐ வங்கி உங்களுக்கு தரும். இதை பயன்படுத்தி onlinesbi.com என்ற இணையதள் முகவரியில் உள்நுழையவும். அந்த பக்கத்தில் உள்ள படிப்படியாக உள்ள வழிகாட்டியை பயன்படுத்தி பதிவு செய்யும் நடைமுறையை பூர்த்தி செய்யவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment