/tamil-ie/media/media_files/uploads/2020/03/b84.jpg)
statebank net banking
statebank net banking : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.சமீபகாலமாக எஸ்பிஐ தொடர் வாடிக்கையாளர்கள் சேவையில் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது மாறியிருக்கும் புதிய மாற்றம் என்னவென்றால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்தவித பயமும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை செய்துக் கொள்ளலாம். இந்த தகவல் வெளியான இந்த ஆண்டு முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மிகவும் வசதியாக இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
statebank net banking :எஸ்பிஐ- யில் வந்திருக்கும் மாற்றங்கள்!
பணத்தை ரொக்கமாக பரிமாற்றுவதற்குப் பதிலாக RTGS, NEFT ஆகிய ஆன்லைன் முறைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான தகவல் தான். எஸ்பிஐ என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வந்தது. ஆனால் இனிமேல் இந்த கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட மாட்டாது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி யோனோ மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வாயிலாக RTGS மற்றும் NEFT முறைகளில் இலவசமாக, எந்தக் கட்டணமும் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.
செம்ம குட் நியூஸ் சொன்ன கனரா வங்கி! உங்களுக்கு தெரியுமா?
ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.