கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40,376 ஆக உயர்ந்தது. இது, உக்ரைன் போரினால் ஆன மாற்றம் என்று கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,424 ஆக சரிந்து காணப்பட்டது. பின்பு, ஆகஸ்ட் மாத இறுதியில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,312 ஆகவும், செப்டம்பர் மாத இறுதியில் சவரனுக்கு ரூ.36,880 ஆக குறைந்தது.
மேலும், நவம்பர் மாதத்தில் சவரனுக்கு ரூ. 39,760 ஆக அதிகரித்து காணப்பட்டது. டிசம்பர் மாத இறுதியில், தங்கம் சவரனுக்கு ரூ.41,040 ஆக விலை அதிகரித்தது.
இதை தொடர்ந்து, இந்தாண்டு ஜனவரி மாதம், தங்கம் சவரனுக்கு ரூ.42,536 ஆக புதிய உச்சத்தை எட்டியது.
இதைத்தொடர்ந்து, ஜனவரி 26ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,040 ஆக உயர்ந்தது.
பிப்ரவரி மாதம், தங்கம் இறக்குமதி விலை உயர்வினால் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.44,040 ஆக புதிய உச்சத்தை எட்டியது.
மார்ச் மாதம் 20ஆம் தேதி, தங்கம் சவரனுக்கு ரூ.44,840 ஆக மேலும் அதிகரித்தது. ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, தங்கம் சவரனுக்கு ரூ.45,840 ஆக புதிய உச்சத்தை எட்டியது.
இதன்பிறகு, சிறிது காலம் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியும், மே மாதம் 4ஆம் தேதி, சவரனுக்கு ரூ.46,000 ஆக இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil