ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும். அதே போல, அரசு வேலைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆகும்
அத்தகைய முக்கிய ஆவணமான ஆதார் கார்டை எப்போதும் வைத்திருப்போம். ஆனால் சில நேரங்களில் ஆதார் கார்டு கையில் இருக்காது. வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவோம். அச்சமயத்தில் ஆதார் கார்ட் தேவைப்படும் சமயத்தில், 10 நிமிடத்தில் எளிதாக இ ஆதாரை டவுன்லோடு செய்துவிடலாம்
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆதார் அட்டையைப் பதிவிறக்க UIDAI அனுமதிக்கிறது.
இ-ஆதாரை பதிவிறக்கம் செய்ய இரண்டு முறைகள் உள்ளன:
பதிவு எண்: முழுப்பெயர் மற்றும் பின்கோட் உதவியுடன் 28 இலக்க பதிவு எண்ணைப் பயன்படுத்தி இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை பதிவிட்டு, இ ஆதாரை டவுன்லோடு செய்யலாம்.
ஆதார் எண்: முழுப்பெயர் மற்றும் பின்கோட் உதவியுடன் 12 இலக்க ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்யலாம். இதிலும் மேலே உள்ள செயல்முறையைப் போலவே உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனை பதிவிட்டு இ ஆதாரை டவுன்லோடு செய்யலாம்.
ஆனால், இ ஆதாரை ஓப்பன் செய்ய நீங்கள் பாஸ்வேர்ட் பதிவிட வேண்டும். உங்களுக்கு பாஸ்வேர்ட் மறந்துபோகும் பட்சத்தில், செட் பேட்டர்ன் பின்பற்றலாம். இது பாஸ்வேர்ட் போல் எளிதாக மறந்துவிடாது.
ஆதார் டவுன்லோடு செய்யும் வழிமுறை
step 1: முதலில் uidai.gov.in என்ற ஆதார் ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
step 2: அடுத்ததாக My Aadhar section இல் ‘Download Aadhaar' பிரிவுக்கு செல்லவும்
step 3: ஈ-ஆதார் டவுன்லோடு செய்ய Aadhaar Number, Enrolment ID அல்லது Virtual ID ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
step 4: அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
step 5: CAPTCHA code வெரிபை செய்ய வேண்டும்
step 6: இறுதியாக பதிவு செய்த எண்ணுக்கு வந்த ஓடிபி நம்பரை, திரையில் பதிவிட வேண்டும். அவ்வளவு தான் இ ஆதார் தயாராகிவிடும்.
பாஸ்வேர்ட்டால் பாதுகாக்கப்பட்ட இ-ஆதாரை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுபோக மொபைலில் mAadhaar செயலி இன்ஸ்டால் செய்து அதன் மூலமாகவும் உடனடியாக இ-ஆதார் டவுன்லோடு செய்துவிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.