இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, சேமிப்பு கணக்கை ஆன்லைனில் தொடங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு, இன்ஸ்டா சேமிப்பு கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. அதில், ஏதெனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
ஆன்லைனி வங்கி கணக்கு தொடங்கும் முடிவால், உங்களுக்கு அலச்சல் குறைகிறது. குறிப்பாக, கொரோனா காலத்தில் வங்கி கிளைக்கு அலையாமல், வீட்டிலிருந்தப்படியே எளிதாக கணக்கை தொடங்கலாம்.
இன்ஸ்டா சேமிப்பு கணக்கு தொடங்கும் அனைவருக்கும், debit RuPay card எஸ்பிஐ வழங்குகிறது. ஆன்லைனில் எஸ்பிஐ சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.
எஸ்பிஐ சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்படி?
- முதலில் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு, Apply Now கிளிக் செய்ய வேண்டும்
- அடுத்ததாக, நீங்கள் SBI Yono Online Portal தளத்திற்கு மாற்றப்படுவீர்கள்
- அங்கு, டிஜிட்டல் சேமிப்பு கணக்கு மற்றும் இன்ஸ்டன்ட் சேமிப்பு கணக்கு திரையில் தோன்றும்
- அதில், ஏதேனும் ஒரு ஆப்ஷனை கிளிக் செய்து, அப்ளை கொடுக்கலாம்.
- அதற்கு, ஆதார் மற்றும் பான் கார்ட் அவசியமானது ஆகும்.
- திரையில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டு, சப்மிட் கொடுக்க வேண்டும்.
குறிப்பு: நீங்கள் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்கும் பட்சத்தில், ஒரு முறையாவது வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இன்ஸ்டா சேமிப்பு கணக்கில் அனைத்து பிராசஸூம் ஆன்லைனிலே முடிந்துவிடும். உங்களது கணக்கு, ஓடிபி அடிப்படையிலான KYCஇல் உறுதி செய்யப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil