/tamil-ie/media/media_files/uploads/2022/10/ATM-1200x800-2.jpg)
ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) உதவும்.
Interoperable cardless cash withdrawal (ICCW) என அழைக்கப்படும் இந்த அம்சம், கார்டுகள் இல்லாவிட்டாலும் மக்கள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது.
குளோனிங், ஸ்கிம்மிங் போன்ற கார்டு மோசடிகளைத் தடுப்பதற்காக ஏடிஎம்களில் ஐசிசிடபிள்யூ விருப்பத்தை வழங்குமாறு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஊக்குவித்து வருகிறது.
அதன்படி, கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி பாரத ஸ்டேட் வங்கியால் இயக்கப்படும் ஏடிஎம்களில் கிடைக்கிறது. தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), HDFC வங்கி போன்ற மேலும் சில வங்கிகளிலும் இந்தச் சேவையை பெறலாம்.
பணம் எடுக்கும் வழிமுறைகள் என்ன
1) நீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்திற்கும் முன் சென்றதும், திரையில் கிடைக்கும் ‘பணத்தை திரும்பப் பெறு’ என்ற விருப்பத்தைக் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2) அடுத்து யூபிஐ விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3) பின்னர் ஏடிஎம் திரையில் தோன்றும் விரைவு பதிலை (QR) ஸ்கேன் செய்ய வேண்டும்.
4) நீங்கள் எடுக்க விரும்பும் பணத்தின் அளவை உள்ளிடவும். ஒரே நேரத்தில் ரூ.5,000 வரை எடுக்கலாம்.
5) உங்கள் UPI பின்னை உள்ளிட்டு, ‘ஹிட் ப்ரோசீட்’ பட்டனைக் கிளிக் செய்யவும். பணம் கிடைக்கும்.
ஏடிஎம்மில் இருந்து UPI மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.