இந்தியாவின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக வாக்காளர் அடையாளர் அட்டை திகழ்கிறது. வாக்களிப்பதற்கு மட்டுமின்றி, உங்களின் முகவரி சான்றிதழுக்கு வாக்காளர் அடையாளர் அட்டை உதவியாக இருக்கும்.
ஆனால், அவற்றில் விவரங்களை மாற்றுவது, புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவது ஆகியவை மக்களுக்கு இன்றளவும் கடினமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அவசர தேவைக்காக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் மக்களுக்காக, டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறுவது எப்படி?
டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெற, முதலில் தேர்தல் ஆணையத்தின் https://voterportal.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் கணக்கு இருந்தால், நீங்களே லாகின் செய்யலாம். இல்லையெனில், மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் உபயோகித்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
கணக்கு தொடங்கியதும், அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை பதிவிட வேண்டும்.
ரெஜிஸ்டர் சக்சஸ் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டல் வாக்காளர் அடையாளர் அட்டை டவுன்லோடு செய்வதற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும்.
அதனை கிளிக் செய்ததும், டிஜிட்டல் வாக்காளர் அட்டை பிடிஎஃப் பார்மட்டில் பதிவிறக்கம் செய்யப்படும்.
டிஜிட்டல் வாக்காளர் அட்டை பலன்கள்
இந்தாண்டு, தேசிய வாக்காளர் தினத்தன்று தேர்தல் ஆணையம் e-EPIC வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையின் நன்மை என்னவென்றால், நீங்கள் வேறு இடத்திற்கு மாறும்போது ஒவ்வொரு முறையும் புதிய அட்டையை உருவாக்கத்தில் சிரமம் ஏற்படாது. எளிதாக, ஆன்லைனில் முகவரியை மாற்றுவதன் மூலம் நீங்கள் புதிய வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்திட முடியும்.