Advertisment

PF Balance: உங்க பிஎஃப் மொத்த பணம் எவ்வளவு? 'செக்' செய்ய சிம்பிள் ஸ்டெப்!

EPFO பயனர்கள் பிஎஃப் மொத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை UAN நம்பர் இல்லாமல் அறிந்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீங்க பணம் கட்ட வேண்டாம்; உங்க நிறுவனம் 8.33% செலுத்தும்: பென்ஷன் ஸ்கீம் பற்றி முழுமையா தெரிஞ்சுக்கோங்க!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) 1976ன் கீழ், அதன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. தொடர்ச்சியாக தனது பயனர்களுக்கு, பிஎஃப் பணத்தை எடுப்பதில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

Advertisment

அந்த வகையில், தற்போது EPFO பயனர்கள் பிஎஃப் மொத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை UAN நம்பர் இல்லாமல் அறிந்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. EPFO அதிகாரப்பூர்வ தளத்தில் epfindia.gov.in பதிவு செய்து, கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பிஎஃப் மொத்த பணத்தை அறிந்துகொள்வது எப்படி?

முன்னதாக சொன்னது போல, பயனாளர் முதலில் EPFO-யின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு, 'click here to know your PF balance.' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக, புதிய பக்கம் திரையில் தோன்றும். அதில், கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பதிவிட வேண்டும்.

UAN நம்பர் இல்லாமல் பிஎஃப் தொகை அறிந்துகொள்ளும் வழிமுறை

1. முதலில் EPFO-யின் தளத்திற்கு செல்ல வேண்டும்

2. 'click here to know your PF balance' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

3. நீங்கள் epfoservices.in.epfo என்ற தளத்திற்கு மாற்றப்படுவீர்கள்

4. அதில், உங்களது மாநிலம், EPF ஆபிஸ் விவரம், பிஎஃப் கணக்கு விவரங்களைப் பதிவிட வேண்டும்.

5. அடுத்ததாக, acknowledgement மற்றும் 'I Agree'ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

6. உங்களின் பிஎஃப் பணத்தின் மொத்த தொகை, திரையில் தோன்றும்.

UAN நம்பருடன் பிஎஃப் தொகை அறியும் வழிமுறை

UAN நம்பர் இருக்கும் பட்சத்தில், பயனாளர் பிஎஃப் தொகையை எஸ்எல்எஸ் அல்லது மிஸ்ஸிடு கால் சர்வீஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம் எஸ்எம்எஸ் வாயிலாக பிஎஃப் தொகை அறிய, பதிவு செய்த மொபைலில் இருந்து 7738299899 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும்.

அந்த மெசேஜின் உள்ளடக்கம், ‘EPFOHO UAN’ என்ற பார்மட்டில் இருந்திட வேண்டும். உடனடியாக, உங்களின் பிஎஃப் தொகை விவரம் மெசேஜ் செய்யப்படும்.

அதே போல, EPFO வாடிக்கையாளர் 011-22901406 என்ற எண்ணிற்கு, பதிவு செய்த மொபைலில் இருந்து மிஸ்ஸிடு கால் விடவேண்டும்.

Epfo Epfo Alert Tamil News Epfo Update Epfo Balance Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment