Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 39 புள்ளிகள் அல்லது 0.17% இழந்து 22,605 ஆக காணப்பட்டது. அதே நேரத்தில், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 189 புள்ளிகள் அல்லது 0.25% பின்வாங்கி 74,482.78 இல் முடிந்தது.
தொடர்ந்து, நிஃப்டி மிட்கேப் 33.75 புள்ளிகள் அல்லது 0.07% உயர்ந்து 50,868.20-ல் முடிவடைந்தது.
வங்கி பங்குகள் அதிகரிப்பு
பேங்க் ஆஃப் பரோடா, பந்தன் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றால் பேங்க் நிஃப்டி குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வாழ்நாள் அதிகபட்சமாக 49,953.45 ஆக உயர்ந்தது.
பங்குகள் நிலவரம்
எம்&எம், பவர் கிரிட், ஹீரோ மோட்டோகார்ப், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை நிஃப்டி-50ல் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹிண்டால்கோ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“