Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வாரத்தின் கடைசி நாளான மே 03ஆம் தேதி வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன்.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 172.35 புள்ளிகள் அல்லது 0.76% இழந்து 22,475.85 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 733 புள்ளிகள் அல்லது 0.98% குறைந்து 7.13,878 ஆகவும் காணப்பட்டது.
இதேபோல், பேங்க் நிஃப்டி 308 புள்ளிகள் அல்லது 0.62% குறைந்து 48,923.55 புள்ளிகளில் முடிவடைந்தது.
பங்குகள் நிலவரம்
கோல் இந்தியா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், ஓஎன்ஜிசி மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் ஆகியவை நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டின.
எல் அண்ட் டி, மாருதி சுஸுகி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், நெஸ்லே இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை மே 03 அன்று நிஃப்டி 50 இல் முக்கிய நஷ்டமடைந்த பங்குகள் ஆகும்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Stock Market Today Highlights: Nifty plunges 170 pts after hitting all-time high, Sensex falls below 74,000 mark
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“