Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (ஏப்.25, 2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 156 புள்ளிகள் அல்லது 0.70% உயர்ந்து 22,558.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 486.50 புள்ளிகள் அல்லது 0.66% முன்னேறி 74,339.44 ஆகவும் நிறைவடைந்தது.
பரந்த குறியீடுகள் ஏற்றத்தில் டப்பட்டன. பேங்க் நிஃப்டி குறியீடு 310.20 புள்ளிகள் அல்லது 0.64% குறைந்து 48,499.20 ஆக முடிந்தது.
பங்குகள் நிலவரம்
இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப், நெஸ்லே இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
கோடக் மஹிந்திரா வங்கி, எல்.டி.ஐ மைண்ட் ட்ரீ (LTIMindtree), டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை மிகவும் பின்தங்கின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“