Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி-50 111 புள்ளிகள் அல்லது 0.49% அதிகரித்து 22,753.80 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 354 புள்ளிகள் அல்லது 0.475% ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அந்த வகையில், நிஃப்டி வங்கி 256 புள்ளிகள் அல்லது 0.53% அதிகரித்து 48,986.60 புள்ளிகளில் நிறைவடைந்தது.
பங்குகள் நிலவரம்
கோல் இந்தியா, பிபிசிஎல், கோடக் வங்கி, ஐடிசி மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதே நேரத்தில் எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், சிப்லா, மாருதி சுசுகி, டிவிஸ் லேப் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை ஏப்ரல் 10 அன்று நிஃப்டி 50 இல் அதிக நஷ்டமடைந்தன.
இதற்கிடையில், ஸ்விஃப்ட் மற்றும் கிராண்ட் விட்டாரா விலைகளை உயர்த்தியதால் மாருதி சுஸுகி வீழ்ச்சியடைந்துள்ளது. மாருதி சுசுகியின் பங்குகள் 2.2% சரிந்து ரூ.12,600.90 ஆக குறைந்தது. ஸ்விஃப்ட்டின் விலைகள் ரூ. 25,000/- வரை உயர்த்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“