Advertisment

சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்வு; முடிவுக்கு வந்த கரடி ஆட்டம்!

Share Market Crash News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை (மே 13,2024) அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

என்.எஸ்.இ நிஃப்டி 50 0.29% உயர்ந்து 22,120.05 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.20% உயர்ந்து 72,809.67 ஆகவும் முடிந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market Crash News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 145.20 புள்ளிகள் அல்லது 0.20% உயர்ந்து 72,809.67 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 65 புள்ளிகள் அல்லது 0.29% உயர்ந்து 22,120.05 ஆகவும் காணப்பட்டன.

Advertisment

நிஃப்டி மிட்கேப் குறியீடுகள் 192 புள்ளிகள் அல்லது 0.39% உயர்ந்து 49,723.80 இல் நிறைவடைந்தது. பேங்க் நிஃப்டி 365 புள்ளிகள் அல்லது 0.77% உயர்ந்து 47,786 ஆக காணப்பட்டது.

பங்குகள் நிலவரம்

நிஃப்டி 50ல் சிப்லா, ஏசியன் பெயின்ட்ஸ், திவிஸ் லேப், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், டாடா மோட்டார்ஸ், பி.பி.சி.எல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஓ.என்.ஜி.சி மற்றும் என்.டி.பி.சி ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

சிப்லா 6%க்கு மேல் உயர்வு

காலாண்டில் (Q4FY24) பார்மஸி நிறுவனமான (pharam compnay) நிகர லாபத்தில் 79% உயர்வை அறிவித்ததால், திங்கள்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் சிப்லாவின் பங்குகள் 6% உயர்ந்தன.
அதன்படி தேசிய பங்குச் சந்தையில் (NSE) பங்கு ஒன்றுக்கு ரூ.1,425.95 இன் இன்ட்ரா-டே அதிகபட்சமாக 6.44% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nifty Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment