Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (பிப்.28,2024) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 247.20 புள்ளிகள் அல்லது 1.11% சரிந்து 21,951.15 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 790.33 புள்ளிகள் அல்லது 1.08% குறைந்து 72,304.89 ஆகவும் காணப்பட்டது.
மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் பங்குகளின் வீழ்ச்சியுடன், பரந்த குறியீடுகள் எதிர்மறையாக வர்த்தகத்தை நிறைவு செய்தன. வங்கி நிஃப்டி குறியீடு 624.90 புள்ளிகள் அல்லது 1.34% குறைந்து 45,931.15-ல் முடிந்தது.
மீடியா மற்றும் ரியாலிட்டி பங்குகள் முன்னணியில் இருந்தன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் எரிசக்தி பங்குகளும் வீழ்ச்சி கண்டன.
பங்குகள் நிலவரம்
நிஃப்டி-50ல் எஸ்பிஐ லைஃப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎஃப்சி லைஃப், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஸுகி ஆகியவை நிஃப்டி-50ல் பின்தங்கிய முக்கிய பங்குகள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“