Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் மே 31 அன்று வர்த்தக அமர்வை நேர்மறையான குறிப்பில் முடித்தன.
மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 132.44 புள்ளிகள் அல்லது 0.18% உயர்ந்து 74,018.04 இல் நாள் வர்த்தகத்தை முடித்தது.
அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 50 61.75 புள்ளிகள் அல்லது 0.220% உயர்ந்து 50220% ஆக முடிந்தது.
நிஃப்டி மிட்கேப் 100 309.10 புள்ளிகள் அல்லது 0.60% 51,735.95 இல் நிறைவடைந்தது. பேங்க் நிஃப்டி 300 புள்ளிகள் அல்லது 0.62% உயர்ந்து 48,982.40 ஆக முடிந்தது.
பங்குகள் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.இ.இசட் (SEZ), ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் கோல் இந்தியா ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதே சமயம் திவிஸ் லேபரட்டரீஸ், நெஸ்லே இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப், டிசிஎஸ் மற்றும் மாருதி சுஸுகி ஆகியவை நிஃப்டி 50 இல் முக்கிய பின்னடைவை சந்தித்து வணிகமாகின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“