Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் மே 07 அன்று சரிந்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி (Nifty-50) 140.20 புள்ளிகள் அல்லது 0.62% இழந்து 22,302.50 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச் சந்தையை (BSE) பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 384 புள்ளிகள் அல்லது 0.52% குறைந்து 73,511 ஆக காணப்பட்டது.
நிஃப்டி மிட்கேப் 100 ஆழமான சரிவை கண்டு 987.75 புள்ளிகள் அல்லது 1.95% குறைந்து 49,674.45 இல் நிலைத்தது.
பங்குகள் நிலவரம்
ஹிந்துஸ்தான் யுனிலீவர், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, நெஸ்லே இந்தியா மற்றும் டிசிஎஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“