Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (பிப்.27,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 76.30 புள்ளிகள் அல்லது 0.34% அதிகரித்து 21,198.35 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 305.08 புள்ளிகள் அல்லது 0.42% உயர்ந்து 73,095.22 ஆகவும் காணப்பட்டது.
லார்ஜ்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் லாபத்துடன், பரந்த குறியீடுகள் நேர்மறையாக வர்த்தகமாகின. பேங்க் நிஃப்டி குறியீடு 11.25 புள்ளிகள் அல்லது 0.02% அதிகரித்து 46,588.05 ஆக முடிந்தது.
மீடியா மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. மற்ற துறைசார் குறியீடுகளை விட ரியாலிட்டி மற்றும் ஆட்டோ பங்குகள் சிறப்பாக செயல்பட்டன.
பங்குகள் நிலவரம்
டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா மற்றும் பவர் கிரிட் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டுகின்றன.
அதேசமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், டிவிஸ் லேப், யுபிஎல் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“