Today Stock market highlights: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (அக்.17) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 261.16 புள்ளிகள் அல்லது 0.39 சதவீதம் உயர்ந்து 66,428.09 ஆக காணப்பட்டது.
தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 79.75 புள்ளிகள் அல்லது 0.4 சதவீதம் உயர்ந்து 19,811.5 ஆகவும் வர்த்தகமானது.
உள்நாட்டு பங்கு குறியீடுகள் பரந்த கொள்முதல் மற்றும் உலகளாவிய பங்குகளின் மீள் எழுச்சிக்கு மத்தியில் உயர்ந்தன. எண்ணெய் விலை மிதமான உயர்வில் காணப்பட்டது.
பரந்த சந்தையில், நிஃப்டி மிட் கேப் 100 மற்றும் ஸ்மால் கேப் 100 ஆகியவை சாதகமாக காணப்பட்டன.
ரியல் எஸ்டேட் துறையின் பங்குகளில் விற்பனை காணப்பட்ட நிலையில், மின்சாரம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் வர்த்தகர்கள் நிலைகளை குவித்து வருகின்றனர்.
மேலும், வர்த்தகர்கள் லாப முன்பதிவைத் தேர்ந்தெடுத்தனர். இது தவிர ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட புவிசார் அரசியல் கவலைகள் பற்றிய சூழ்நிலை நிலையற்றதாக இருப்பதால் சில எச்சரிக்கை காரணிகளும் சந்தைகளில் நிலவின.
பிபிசிஎல், கோல் இந்தியா, பவர் கிரிட், எச்டிஎப்சி லைஃப் மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. மறுபுறம், நிஃப்டி கூடையில் உள்ள 12 பங்குகள் பிளாட்லைனுக்குக் கீழே சரிந்தன. தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ், எல்&டி, யுபிஎல், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகியவை 0.43-1.53 சதவீத இழப்புகளுடன் மோசமாக பாதிக்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“