Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (மே6, 2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 85.75 புள்ளிகள் அல்லது 0.38% அதிகரித்து 22,561.60 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 340.91 புள்ளிகள் அல்லது 0.46% அதிகரித்து 74,219.06 ஆகவும் காணப்பட்டது.
பரந்த குறியீடுகள் கலப்பு மண்டலத்தில் திறக்கப்பட்டன. வங்கி நிஃப்டி குறியீடு 251 புள்ளிகள் அல்லது 0.51% உயர்ந்து 49,174.55 இல் நிலைபெற்றது.
பங்குகள் நிலவரம்
பிரிட்டானியா, கோடக் வங்கி, டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மே 06 அன்று நிஃப்டி 50 இல் டைட்டன், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், எஸ்பிஐ மற்றும் கோல் இந்தியா ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“