திங்கள்கிழமை (செப்.12) வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் நேர்மறையாக நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் உயர்ந்து, 60,115.13 எனவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிப்ஃடி 103 புள்ளிகள் உயர்ந்து 17936.35 எனவும் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையில் டைடன், ஆக்ஸிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் இன்போஃசிஸ் நிறுவன பங்குகள் லாபத்திலும் ஹெச்டிஎஃப்சி, ஹெடிஎஃப்சி வங்கி, நெஸ்லே, ஹெச்யூஎல், எம் அண்ட் எம் நிறுவன பங்குகள் சரிவையும் சந்தித்தன.
அதிகபட்சமாக டைட்டன் பங்குகள் 2.5 சதவீதம் உயர்வை கண்டு ரூ.2664.95 என காணப்பட்டது. ஹெச்டிஎஃப்சி பங்குகள் 0.5 சதவீதம் வரை சரிவை கண்டன.
தேசிய பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், டைடன், டெக் மஹிந்திரா, திவிஸ் லேப், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் லாபத்தை சந்தித்தன.
கோல் இந்தியா, ஸ்ரீ சிமெண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“