Today Stock Market 22 Sep 2022: இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ., சென்செக்ஸ் குறியீட்டெண் 337.06 (0.57%) வீழ்ச்சி கண்டு 59119.72 ஆகவும், தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ., நிஃப்டி 17629.80 (0.50%) ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பி.எஸ்.இ.,யில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் 12 பங்குகள் லாபத்திலும் மீதமுள்ள 18 பங்குகள் சரிவையும் சந்தித்தன. ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் ரூ.16.85 குறைந்து (2.09%) ரூ.789.10 ஆக காணப்படுகிறது.
தொடர்ந்து பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி., வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, லார்சன் அண்ட் டர்போ, நெஸ்லே, பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, டைடன் கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்ககள் நஷ்டத்தை சந்தித்தன.
அதேநேரம், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேப் இந்துஸ்தான் யூனிலிவர் பங்குகள் லாபத்தில் இயங்கின. இதில் அதிகப்பட்சமாக ஏசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலிவர் பங்குகள் முறையே 2.51%, 2.64% என உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையிலும் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் ரூ.17.35 (2.15%) வீழ்ச்சிகண்டு ரூ.789.20ஆக காணப்படுகிறது. இங்கு அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் லாபத்திலும், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், பிபிசிஎல், சிப்லா நிறுவன பங்குகள் அதிக நஷ்டத்திலும் வர்த்தகமாகின.
என்.எஸ்.இ.,யில் பட்டியிலிடப்பட்ட 50 பங்குகளில் 22 பங்குகள் தவிர மற்ற பங்குகள் நஷ்டத்தில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil