Stock market today: இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை (செப்.28) வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 165.55 (0.97%)மும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 583.08 (1.02%)மும் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவன பங்குகள் முறையே 2 மற்றும் 1 சதவீதம் லாபம் கண்டன.
இதையும் படியுங்கள்: Google Pay: UPI பேமன்ட் மக்களே உஷார்… எஸ்.பி.ஐ வெளியிட்ட 6 எச்சரிக்கைகள்!
மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.சி.எல். டெக், ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இந்த், கோடக் மஹிந்திரா வங்கி, லார்சன் அண்ட் டர்போ, மாருதி சுசூகி, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா, கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவை கண்டன. அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா, திவிஸ் லேப் நிறுவன பங்குகள் லாபத்தில் நிறைவு செய்தன.
இந்த வாரம் முழுக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிவை கண்டுள்ளது. உலகளாவிய சாதகற்ற சூழல்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தை உயர்த்தப் போகிறது என்பது போன்ற செய்திகள் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கின்றன.
தற்போது மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 56,598.28 எனவும் தேசிய பங்குச் சந்தை நி.ஃப்டி 16,858 எனவும் காணப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“