Stock Market Today : இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை அமர்வை நஷ்டத்தில் நிறைவு செய்தன. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. பொது மற்றும் தனியார் வங்கிகள், ஆட்டோ மற்றும் பார்மா துறை குறியீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 570.60 புள்ளிகள் சரிவை கண்டு 66,230.24 என இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது கிட்டத்தட்ட 0.85 சதவீதம் சரிவு ஆகும்.
எனினும் சந்தையில் அதானி போர்ட்ஸ் பங்குகள் 1.60 சதவீதம் வரை உயர்வை கண்டன. இந்தப் பங்குகளின் விலை ரூ.831.10 என காணப்படுகிறது.
மேலும் அதிகப்படியான நஷ்டத்தை எம் அண்ட் எம் நிறுவனம் சந்தித்தது. 3.11 சதவீதம் வரை வீழ்ச்சியுற்ற இந்நிறுவனத்தின் பங்குகள் தற்போது 1,583.25 ஆக உள்ளன.
நிஃப்டியை பொருத்தவரை 0.80 சதவீதம் வரை சரிந்து 19,742.35 ஆக காணப்பட்டது. நிஃப்டி பேங்க் பங்குகள் 1.68 சதவீதம் சரிந்து 44,623.85 ஆக காணப்பட்டன.
இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை பங்குகள் 2.28 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன. அதாவது தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தைகள் சரிந்து காணப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“