SBI Life Certificate Submission Last Date is 30th November: எஸ்பிஐ வங்கியில் பென்ஷன் பெறுபவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் லைஃவ் சர்ட்டிஃபிகேட்டை சமர்பித்தால் மட்டுமே இனி பென்ஷன் பெற முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பென்ஷன் பெரும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ லைஃவ் சர்ட்டிஃபிகேட்டை சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான தகவல்களுக்கு கீழே படியுங்கள்.
எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் , தனது வங்கியின் கீழ் பென்ஷன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதன்படி, எஸ்பிஐ வங்கியின் கீழ் பென்ஷன் பெறுபவர்கள் வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் லைஃவ் சர்ட்டிஃபிகேட்டை வங்கியிடன் சமர்பிக்க வேண்டும்.
அப்படி சமர்பித்தால் மட்டுமே, இனிமேல் பென்ஷன் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் பெரும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ லைஃவ் சர்ட்டிஃபிகேட்டை சமர்ப்பிக்கலாம்.
SBI Life Certificate: பென்ஷன் திட்டத்தில் புதிய நடைமுறை:
அதே போல், ஜீவன் பிரமன் திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறபவர்களுக்கு இது மிகவும் எளிதான முறையாகும். இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், டிஜிட்டல் லைஃவ் சர்ட்டிஃபிகேட்டை ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே சமர்பிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
அப்படியென்றால், பென்ஷன் பெறுபவர்கள் தங்களது லைஃவ் சர்ட்டிஃபிகேட்டை ஆதார் எண்ணுடன் இணைத்தே சமர்பிக்க வேண்டும். மேலும், sbi.co.in. என்ற எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் சர்ட்டிஃபிகேட்டை சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைஃவ் சர்ட்டிஃபிகேட்டை எங்கு பெறலாம்?
வங்கிக் கிளைகள் அல்லது அரசு அலுவங்கங்களில் பயோ -மெட்ரிக் மூலம் உங்களின் ஆதார் எண்ணை சரிபார்த்து பின்பு லைஃவ் சர்ட்டிஃபிகேட் வழங்கப்படும்.