Advertisment

புதிய நிறுவனம் தொடங்கிய தயாநிதி மாறன் வாரிசுகள்: என்னனு பாருங்க!

இந்த நிறுவனத்தில் நிவேதிதா அரவிந்த் (25 வயது), திவ்யா தயாநிதி மாறன் (22 வயது) மற்றும் கரண் தயாநிதி மாறன் (19 வயது) உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Successors of Dayanidhi Maran

கரண் தயாநிதி மாறன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆக்கவுன்டிங் மற்றும் ஃபைனான்ஸ் படித்துள்ளார்

தயாநிதி மாறன் வாரிசுகள் கரண், திவ்யா வர்த்தக துறைக்குள் தற்போது நுழைந்துள்ளனர். இவர்கள்,  Kkix என்ற ஸ்னீக்கர் ஷூ கஸ்டமைஸ் வர்த்தகத்தை தொடங்கியுள்ளனர்.

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் ஸ்னீக்கர் ஷூக்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் மற்றும் ஆர்வம் உள்ளது.

Advertisment

மேலும் இந்த வகை ஸ்னீக்கர் ஷூக்களுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்னீக்கர் ஷூ விலை ரூ.17,999ல் இருந்து தொடங்குகிறது.

தொடர்ந்து, ரூ.30 ஆயிரம் வரையும் ஷூக்கள் உள்ளன.

Kkix நிறுவனம் சுமார் 50 தென்னிந்திய கலைஞர்கள் கொண்ட குழுவை இணைத்துள்ளது, வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக, டிஜிட்டல் டிசைனர்கள் ஷூ வடிவமைப்புகளின் மாக்-அப்களை உருவாக்கி தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிறுவனத்தில் நிவேதிதா அரவிந்த் (25 வயது), திவ்யா தயாநிதி மாறன் (22 வயது) மற்றும் கரண் தயாநிதி மாறன் (19 வயது) உள்ளனர்.

கரண் தயாநிதி மாறன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆக்கவுன்டிங் மற்றும் ஃபைனான்ஸ் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment