scorecardresearch

ரூ.50 சேமிப்பில் ரூ.8 லட்சம் ரிட்டன்: செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க!

ஒரு நாளைக்கு ரூ.100 சேமித்தால் உங்கள் மகளுக்கு ரூ.16 லட்சம் கிடைக்கும். அதே நேரத்தில் நாளொன்று ரூ.50 சேமித்தால் முதிர்ச்சியின்போது ரூ.8 லட்சம் வரை ரிட்டன் பெறலாம்.

Sukanya Samriddhi Account Get Rs 16 lakh for your daughter by saving just Rs 100 a day
சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டமாகும்.

Sukanya Samriddhi SSY Account calculation: சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தையின் நலனுக்கான நல்ல சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கைத் திறக்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்களுக்கு இரண்டு கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் இந்தத் திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு கூட வரி கிடையாது.
முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆகவே பெற்றோர் தங்கள் மகள்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க பயன்படுத்தலாம். மேலும், எஸ்எஸ்ஒய் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வைப்புத்தொகை முதிர்ச்சியின் போது சுமார் ரூ.67 லட்சத்தை அளிக்கும்.

உதாரணமாக, நீங்கள் செல்வ மகள் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்ய ஒரு நாளைக்கு ரூ.100 சேமித்தால், வருடாந்திர பங்களிப்பு ரூ.36,000 ஆக இருக்கும்.
மேலும் 8% வட்டியில் முதிர்ச்சியில் திரும்பப் பெறக்கூடிய தொகை சுமார் ரூ. 16 லட்சமாக இருக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது.

அதேநேரத்தில், ஒரு நாளைக்கு ரூ. 50 சேமிப்பதன் மூலம், ஆண்டு பங்களிப்பு ரூ. 18,000 ஆகவும், முதிர்வுத் தொகை சுமார் ரூ. 8 லட்சமாகவும் இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sukanya samriddhi account get rs 16 lakh for your daughter by saving just rs 100 a day