Advertisment

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்வு: மற்ற திட்டங்களை செக் பண்ணுங்க

சமீபத்திய திருத்தப்பட்ட பட்டியலின்படி, சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் வட்டி விகிதம் 8.2% ஆக இருக்கும். அதே சமயம் 3 வருட டெபாசிட்டுக்கு நடப்பு நிதியாண்டின் வட்டி விகிதம் 7.1% ஆக இருக்கும்.

author-image
WebDesk
New Update
போலீசில் புகார்

முன்னதாக, சுகன்யா சம்ரித்தி திட்டம் மற்றும் 3 ஆண்டு டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் முறையே 8.0%, 7.1% ஆக காணப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

post-office-savings-scheme | ppf | kisan-vikas | sukanya-samriddhi-yojana | 2024 ஜனவரி- மார்ச் வரையிலான காலாண்டில் அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

சமீபத்திய திருத்தங்களின்படி, சுகன்யா சம்ரித்தி (செல்வ மகள் சேமிப்பு) திட்டத்தின் வட்டி விகிதம் 8.2% ஆக இருக்கும். அதே சமயம் 3 வருட டிடிக்கு நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் 7.1% ஆக இருக்கும்.

முன்னதாக, சுகன்யா சம்ரித்தி திட்டம் மற்றும் 3 ஆண்டு டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் முறையே 8.0%, 7.1% ஆக காணப்பட்டது.

Advertisment

பிபிஎஃப் விகிதங்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் இருந்தது. இது கடைசியாக ஏப்ரல்-ஜூன் 2020 இல் மாற்றப்பட்டது, இது 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

கடந்த அறிவிப்பில், ஐந்தாண்டு தொடர் வைப்பு விகிதங்களில் சிறிதளவு அதிகரிப்பு தவிர, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை அதே அளவில் மத்திய அரசு வைத்திருந்தது.

இன்றைய திருத்தத்திற்கு முன், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 4 சதவீதம் (அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு) மற்றும் 8.2 சதவீதம் (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்) வரை இருந்தது.

ஜனவரி-மார்ச் 2024க்கான வட்டி விகிதங்கள்

  • சேமிப்பு வைப்பு: 4 சதவீதம்
  • 1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம்
  • 2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்
  • 3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.1 சதவீதம்
  • 5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 சதவீதம்
  • 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகை: 6.7 சதவீதம் (6.5 சதவீதம் முன்பு)
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC): 7.7 சதவீதம்
  • கிசான் விகாஸ் பத்ரா: 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)

    பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 சதவீதம்

    சுகன்யா சம்ரித்தி கணக்கு: 8.2 சதவீதம்
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2 சதவீதம்
  • மாத வருமானக் கணக்கு: 7.4 சதவீதம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sukanya Samriddhi Yojana Ppf Kisan Vikas Post Office Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment