பெண் குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டுமா? உங்களுக்காகவே சுகன்யா சம்ருதி யோஜ்னா திட்டம்!

பெண் குழந்தைகளின் படிப்பு,திருமணம், வேலை என அனைத்தையும் மனதில் கொண்டு பெற்றோர்கள் செயல்படுவார்கள்

பெண் குழந்தைகளுக்கு சேமிக்க நினைப்பவர்களுக்கு நலன் பயக்கும் திட்டம் தான் சுகன்ய சம்ருதி யோஜ்னா. இந்த திட்டத்தில் ரூ. 250 முதல் டெபாசிட் செய்து உங்கள் பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிக்க முடியும்.

சுகன்யா சம்ருதி யோஜ்னா:

பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்களுக்கு இருக்கும் அதிகப்படியான  கவலை அவர்களின் எதிர்காலம் குறித்து தான். குறிப்பாக அவர்களுக்காக சிறுவயது முதலே சேமிக்க வேண்டும் என்ற பயமும் பெற்றோர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இதற்கு காரணம், அவர்களின் படிப்பு,திருமணம், வேலை என அனைத்தையும் மனதில் கொண்டு பெற்றோர்கள் செயல்படுவார்கள்.  அந்த வகையில் சுகன்ய சம்ருதி யோஜ்னா சிறுசேமிப்பு திட்டங்கள் அவர்களின் வருங்காலத்திற்கு கைக்கொடுக்கும்.

கடந்த 20015 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட  சுகன்ய சம்ருதி யோஜ்னா திட்டம் தற்போது வரை  அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. . இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் அல்லது குறிப்பிட்ட சில வங்கிகள் மூலம் சிறப்பு வங்கிக் கணக்கை தொடங்க முடியும் .

இந்தக் கணக்கை குழந்தையின் பெற்றோர்கள் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள காப்பாளர் மட்டுமே தொடங்க முடியும். மேலும், ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். இதில் 1000 ரூபாய் வைப்புத்தொகை கட்டவேண்டும் என்கிற விதி முதலில் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைப்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த திட்டதிற்கான விதிமுறைகளை அரசு மாற்றியமைத்தது. அதன்படி முன்னதாக குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1000 ரூபாயில் இருந்து தற்போது ரூ.250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close