மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறுசேமிப்பு திட்டம்தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். சுகன்யா சம்ரிதி யோஜா எனப் பெயர்கொண்ட இந்தத் திட்டம் பல்வேறு நன்மைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
பெண் குழந்தைகளின் சிறந்த நிதி எதிர்காலத்தை உறுதிசெய்யும் இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.12500 முதலீடு செய்தால் வருமான வரி விலக்கு பெற முடியும். மேலும் 21 ஆண்டுகள் முழுமையான முதிர்ச்சிக்கு பிறகு ரூ.64 லட்சம் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். முதிர்ச்சி காலம் 21 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்துக்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 18 ஆண்டுகள் வரை கணக்கில் இருந்து பணம் பெறவில்லையெனில் அவருக்கு 18 ஆண்டுகளில் ரூ.64 லட்சம் வரை முதிர்வு தொகை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் சில முக்கிய விதிமுறைகள் உள்ளன. அதன்படி முதலீட்டாளர் ஒருவரின் முதலீடு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை தாண்டக் கூடாது.
அஞ்சல் துறை செயல்படுத்திய சிறு சேமிப்பு திட்டங்களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திட்டங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டமும் ஒன்று. இந்தத் திட்டம் முதல் இரு பெண் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil