Advertisment

சுகன்யா சம்ரிதி Vs PPF : வருங்காலத்தை பாதுகாக்கும் சிறந்த தபால் நிலைய சேமிப்பு திட்டம் எது?

Sukanya Samriddhi vs PPF interest rate tenure and other details here: இவ்விரு திட்டங்களும் நீண்டகால சேமிப்பு திட்டங்கள். ஆனால் பிபிஎஃப் வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும் உள்ளது

author-image
WebDesk
New Update
சுகன்யா சம்ரிதி Vs PPF : வருங்காலத்தை பாதுகாக்கும் சிறந்த தபால் நிலைய சேமிப்பு திட்டம் எது?

சுகன்யா சம்ரிதி யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி இரண்டும் அதிக வருவாய் ஈட்டும் முதலீட்டு திட்டங்களாகும். இவ்விரண்டு திட்டங்களும் இந்திய அரசின் ஆதரவை பெற்றுள்ளவை என்பது கூடுதல் சிறப்பு.

Advertisment

இதில், சுகன்யா சம்ரிதி திட்டம் பெண் குழந்தைகளுக்கு மட்டுமானது. அதே நேரத்தில் சம்பாதிக்கும் எந்தவொரு நபரும் பிபிஎஃப் கணக்கு திறக்க முடியும். இவ்விரு திட்டங்களும் நீண்டகால சேமிப்பு திட்டங்கள். ஆனால் பிபிஎஃப் வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும் உள்ளது. பிபிஎஃப் கணக்கின் தற்போதைய ஆண்டு வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், முதலீட்டு முடிவை எடுக்க வெறும் வட்டி விகிதம் மட்டும் போதாது என்பதால் பெண் குழந்தைக்கு முதலீடு செய்யும் போது மற்ற முதலீட்டு விதிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சேமிப்புத் திட்டங்களின் முதலீடு செய்பவர்களுக்கு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இரண்டு திட்டங்களுமே முதலீட்டின் நேரத்தைப் பொறுத்தது. ஒரு முதலீட்டாளர் தனது பெண் குழந்தை பிறந்த உடனேயே முதலீடு செய்யத் தொடங்கினால், எஸ்எஸ்ஒய் மிகவும் பொருத்தமானது. உங்களால் முதலீடு செய்ய முடியும் என்றால், சுகன்யா சம்ரிதி கணக்கில் குழந்தையின் 14 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் முதலீட்டைத் தொடங்க தாமதமாகிவிட்டால், இத்திட்டத்தில் பெண் குழந்தையின் 14 வயதுக்கு பிறகு முதலீடு செய்ய முடியாததால், எஸ்.எஸ்.ஒய் கணக்கில் அசல் தொகை குறையும். அதேநேரம், பிபிஎஃப் ஒரு முதலீட்டாளருக்கு அதன் முதிர்வு 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய அனுமதிக்கிறது.

எஸ்.எஸ்.ஒய் கணக்கிற்கு சரியான முதலீட்டு முறை தேவை. ஆனால், பிபிஎஃப் முதலீட்டாளருக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. பிபிஎஃப்-ஐ ஒப்பிடும்போது, எஸ்.எஸ்.ஒய் இல், முன்கூட்டியே திரும்பப் பெறுவது மிகவும் கடினம், பிபிஎஃப் கணக்கு திறந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் அபராதத்துடன் முழுத் தொகையையும் திரும்ப பெறலாம். எனவே, ஒருவரின் முதலீட்டில் நெகிழ்வுத்தன்மையை விரும்புவோர், எஸ்.எஸ்.யை விட பிபிஎஃப் சிறந்த வழி. எஸ்.எஸ்.ஒய் ஒரு சொத்து முதலீடு, பிபிஎஃப் ஒரு பணம்  முதலீடு. முதலீட்டாளர் இந்த இரண்டு ஆபத்து இல்லாத முதலீட்டு திட்டங்களுக்கு இடையில் இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.

பிபிஎஃப் இல், ஒரு முதலீட்டாளர் விரும்பும் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார். அதே நேரத்தில் எஸ்எஸ்ஒய் விஷயத்தில், இந்த விருப்பம் மறைமுகமானது. பிபிஎஃப்-ல் முதிர்வு காலத்திற்குப் பிறகும் உங்கள் முதலீட்டு காலத்தை நீட்டிக்க முடியும், சுகன்யா சம்ரிதி கணக்கு முதிர்வு நேரத்தில் உங்களுக்கு மொத்த தொகை தேவையில்லை என்றாலும், முதிர்வுத் தொகையைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

SSY இல், ஒரு முதலீட்டாளரின் பணம் 18 ஆண்டுகளாக முடங்கியிருக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முதலீட்டாளர் எஸ்எஸ்ஒய் கணக்கு நிலுவையில் 50 சதவீதத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார், மீதமுள்ள 50 சதவிகிதம் முதலீட்டாளரின் மகளுக்கு 21 வயதாகும்போது திரும்பப் பெறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Sukanya Samriddhi Yojana Ppf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment