/tamil-ie/media/media_files/uploads/2020/08/5-8.jpg)
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1000, ரூ.2000, ரூ.3000 அல்லது ரூ.5 ஆயிரம் செலுத்தினால் முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் நபர் ஒருவர் தங்களின் 10 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தையின் பெயரில் ரூ.1000 முதல் ரூ.15 ஆயிரம் வரை மாதந்தோறும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைக்கு 18 வயது வரும்போது தேவைப்பட்டால் பாதி பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தை ரூ.250 செலுத்தி தொடங்க வேண்டும். திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் ஆகும். தற்போது ரூ.1000, ரூ.2000, ரூ.3000 மற்றும் ரூ.5ஆயிரம் செலுத்தினால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
செல்வ மகள் சேமிப்பு கணக்கு ரிட்டன்
- ரூ.1000 வைத்து மாதந்தோறும் 15 ஆண்டுகள் செலுத்தினால் ரூ.180000 ஆயிரம் செலுத்தியிருப்பீர்கள். உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.3,29,212 கிடைக்கும்.
- ரூ.2 ஆயிரம் வைத்து முதலீடு செய்தால் முதிர்ச்சியின்போது ரூ.10,18,425 லாபம் கிடைக்கும்.
- ரூ.3 ஆயிரம் செலுத்தினால் ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 637 கிடைக்கும்.
- ரூ.4 ஆயிரம் வைத்து முதலீடு செய்தால் ரூ.20 லட்சத்து 36 ஆயிரத்து 850 கிடைக்கும்.
- ரூ.5 ஆயிரம் வைத்து முதலீடு செய்தால் ரூ.25 லட்சத்து 46 ஆயிரத்து 062 கிடைக்கும். வட்டியாக மட்டும் 16 லட்சத்து 46 ஆயிரத்து 062 கிடைக்கும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) என்பது பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டமாகும்.
பெண் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக எதிர்கால நிதியை உருவாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு இதனை தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.