Sukanya Samriddhi Yojana : பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற பின்பு செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்ற பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்துகொள்ளலாம். ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் பெயரில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
விதிவிலக்காக இரட்டை குழந்தைகள் என்றால் மற்றொரு பெண் குழந்தை பெயரிலும் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.1,50,000 வரை அதிகப்பட்சமாக சேமித்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும்.
8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் ஒருவர் 1.5 லட்சம் முதலீடு செய்தால், 21 ஆண்டுகள் முதிர்ச்சியின்போது ரூ.67.3 லட்சம் கிடைக்கும். அதுவே ஆண்டுக்கு ரூ.1,11,370 முதலீடு செய்தால் முதிர்ச்சியின்போது ரூ.50 லட்சம் ரிட்டன் கிடைக்கும். அதாவது நாளொன்றுக்கு நீங்கள் ரூ.305 சேமிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“