ஒரு முறை SSY பதிவுகள் 12 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படலாம் என எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை கூறுகின்றது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்தில் அரசாங்கம் சில மாறுதல்கள் கொண்டுவரலாம் எனக் கூறப்படுகிறது. SBI ஆராய்ச்சியின் சமீபத்திய ‘Ecowrap’ அறிக்கையின்படி, நிதிப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் சிறு சேமிப்புத் திட்டங்களைத் தொடர்ந்து நம்பியிருக்கும்.
24 நிதியாண்டில் சிறுசேமிப்பு திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்எஸ்ஒய் கணக்கைத் திறப்பதைத் தூண்டும் வகையில், 12 ஆண்டுகள் வரை ஒரு முறை பதிவு செய்ய அரசாங்கம் அனுமதிக்கலாம் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
தற்போது அஞ்சல் அலுவலகங்களில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் SSY கணக்கு தொடங்கலாம். இந்த திட்டம் வைப்புத்தொகைக்கு 7.6% வட்டி வழங்குகிறது.
தற்போது, வணிக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் நிலுவையில் உள்ள G-sec ஆவணங்களில் (செப்'22) 64.2% பங்கு வகிக்கின்றன.
குறுகிய/நடுக்காலப் பிரிவுக்கு, வங்கிகள், பரஸ்பர நிதிகள் (கடன் & கலப்பு), பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் (ULIP & ஹைப்ரிட்) ஆகியவை சாத்தியமான பிரிவுகள் ஆகும்.
இதில், இபிஎஃப்ஓ, ஓய்வூதிய நிதி, பிற வருங்கால வைப்பு நிதி மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நீண்ட காலப் பிரிவில் பங்கு வகிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/