Advertisment

டெல்லி, வாரணாசி, வைஷ்ணவாவுக்கு சிறப்பு ரயில்: செக் பண்ணுங்க

Summer special train: டெல்லி-வாரணாசி-வைஷ்ணவதேவி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Tamil News

Tamil News Updates

Summer special train: இந்திய ரயில்வே பயணிகளின் டிரிப்-ஐ வசதியாக மாற்றும் முயற்சியில் பல்வேறு இடங்களுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இந்த கோடைக் கால சிறப்பு ரயில்கள் புது டெல்லி- வாரணாசி, மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் உதம்பூர் இடையே இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

புது டெல்லி-வாரணாசி சிறப்பு ரயில் (ரயில் எண்: 04052/04051)

இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜூன் 4 முதல் ஜூன் 25 வரை இயக்கப்படுகிறது.

புது டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணவம் (ரயில் எண்: 04071/04072)

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜூன் 2 முதல் ஜூன் 30 வரை இயக்கப்படுகிறது.

புது டெல்லி-உதம்பூர் (ரயில் எண்:04075/04076)

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும்.

புது டெல்லி - வாரணாசி (ரயில் எண்: 04080/04079)

ஒவ்வொரு திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஜூன் 3 முதல் ஜூன் 30 வரை இயக்கப்படும். இந்த ரயில், டெல்லியில் இருந்து இரவு 07.20 மணிக்கு ரயில் புறப்படும்.

புது டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா (ரயில் எண்: 04081/04082)

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜூன் 3 முதல் ஜூன் 24 வரை இயக்கப்படும். புது டெல்லியில் இருந்து காலை 11:15 மணிக்கு ரயில் புறப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Varanasi Special Trains Irctc Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment