Mutual Fund | ஓராண்டில் ஏறக்குறைய 40 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த சுந்தரம் மல்டி கேப் ஃபண்டு குறித்தும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிதி கொடுத்த வருவாய் குறித்து இங்கு பார்க்கலாம்.
Advertisment
சுந்தரம் மல்டி கேப் ஃபண்டு 2000வது ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தொடங்கப்பட்டது ஆகும். பொதுவாக, மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்கு மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை முதலீடு செய்யும் திட்டத்தைக் குறிக்கிறது.
மேலும், பல்வேறு துறைகள் மற்றும் சந்தையின் பிரிவுகளின் பங்குகளில் முதலீடு செய்வதால் அவை 'பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகள்' என்றும் குறிப்பிடப்படுகின்றன.
சுந்தரம் மல்டி கேப் ஃபண்டு ரிட்டன்
Advertisment
Advertisement
ஆண்டு
ரிட்டன் (%)
ரூ.1 லட்சம் முதலீடு வருவாய்
1 ஆண்டு
39.6
1.39 லட்சம்
3 ஆண்டு
19.5
1.7 லட்சம்
5 ஆண்டு
16.00
2.1 லட்சம்
10 ஆண்டு
16.3
4.52 லட்சம்
நிதி தொடங்கிய ஆண்டு
15.6
30 லட்சம்
இந்தத் திட்டம் கடந்த ஓராண்டில் 39.6 சதவீத வருமானத்தை அளித்துள்ளது, இதன் மூலம் ₹1 லட்சம் முதலீடு ₹1.39 லட்சமாக வளர அனுமதிக்கிறது. மேலும் யாரேனும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ₹1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் ₹1 லட்சம் முதலீடு ₹1.7 லட்சமாக வளர்ந்திருக்கும்.
மேலும், இந்த ₹1 லட்சம் முதலீடு 16 சதவீதம் வருமானம் கொடுத்த பிறகு ஐந்து ஆண்டுகளில் ₹2.1 லட்சமாக உயர்ந்திருக்கும். மேலும் ஒரு முதலீட்டாளர் பத்தாண்டுகளுக்கு முன்பு ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால், முதலீடு ₹4.52 லட்சமாக வளர்ந்திருக்கும்.
சுந்தரம் மல்டி கேப் ஃபண்டில் சராசரியாக ₹2,374 கோடி AUM (நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள்) உள்ளது. இந்த நிதி, சுதிர் கேடியா மற்றும் ரதிஷ் பி வேரியர் என்ற இரண்டு நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“