பேங்க் ஆஃப் இந்தியா ரூ.2 கோடிக்கும் குறைவான சில்லறை ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் மே 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
புதிய விகிதங்களின் படி ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
அதேநேரம் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீதம் வட்டியும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.65 சதவீதம் வட்டியும் வழங்குகிறது. ரிசர்வ் வங்கியின் மாறிவரும் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப வங்கிகள் தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில் சில ஸ்மால் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 9.85 வரை வட்டி வழங்குகின்றன. எனினும், ஸ்மால் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில் ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையுள்ள முதலீடுகளுக்குதான் காப்பீடு கிடைக்குமாம். இது தொடர்பாக வங்கிகளை தொடர்பு கொண்டு முழுமையான தகவல்களை தெரிந்துக் கொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“