எஃப்.டி-க்கு 9.25 சதவீதம் வட்டி; இந்த வங்கியை நோட் பண்ணுங்க!
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.25 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி குறித்து பார்க்கலாம். இந்த வங்கியின் டெபாசிட் கால அளவு மற்றும் வட்டி விகிதங்கள் இங்கே உள்ளன.
Fixed Deposits |சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள், மார்ச் 1, 2024ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விகிதத்தின்படி, 25 மாதங்கள் கால அளவு கொண்ட டெபாசிட் திட்டத்துக்கு வட்டி விகிதத்தை 41 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
Advertisment
பொதுவாக வங்கி 2 ஆண்டுகள் 1 மாதம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு சாதாரண பொதுமக்களுக்கு 4.50 சதவீதம் முதல் 9.25 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது.
வங்கியின் வட்டி விகிதம்
காலம்
வட்டி விகிதம் (ஆண்டு) (%)
மூத்தக் குடிமக்கள்
7-14 நாள்கள்
4.00%
4.50%
15-45 நாள்கள்
4.25%
4.75%
46-90 நாள்கள்
4.50%
5.00%
91 நாள்கள் முதல் 6 மாதம்
5.00%
5.50%
6 மாதத்துக்கு மேல் 9 மாதம் வரை
5.50%
6.00%
9 மாதத்துக்கு மேல் ஓராண்டுக்குள்
6.00%
6.50%
1 ஆண்டு
6.85%
7.35%
1 ஆண்டு முதல் 15 மாதம் வரை
8.25%
8.75%
15 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை
8.50%
9.00%
2 ஆண்டு 1 நாள்
8.60%
9.10%
2 ஆண்டு 2 நாள்
8.65%
9.15%
2 ஆண்டு 3 நாள் முதல் 25 மாதங்கள் வரை
8.60%
9.10%
2 ஆண்டு 1 மாதம்
9.01%
9.51%
25 மாதங்களுக்கு மேல் 3 ஆண்டு
8.60%
9.10%
3 ஆண்டு-5 ஆண்டுக்குள்
6.75%
7.25%
5 ஆண்டுகள்
8.25%
8.75%
5-10 ஆண்டுகள்
7.25%
7.75%
டெர்ம் டெபாசிட்களை முன்கூட்டியே திரும்ப பெறும்போது 1 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும். மேலும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் வரை ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் காப்பீடு உண்டு என்பது நினைவுக் கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“