Advertisment

செம்ம ஸ்டைலிஷ், விலை ரூ.90 ஆயிரம்: விற்பனையில் முத்திரை பதிக்கும் சுசூகி ஸ்கூட்டி!

சுசூகி (Suzuki) நிறுவனத்தின் ஆக்ஸஸ் ஸ்கூட்டிகள் உள்நாட்டில் 83,798 யூனிட்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் உள்நாட்டு விற்பனையை விட 16% வளர்ச்சியாகும்.

author-image
WebDesk
New Update
best-selling 125cc scooters in India

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 125cc ஸ்கூட்டர்களில் Suzuki Access 125 ஒன்றாகும்

Suzuki Motorcycle sales up: சுசூகி (Suzuki) மோட்டார்சைக்கிள் செப்டம்பர் 2023 இல் 97,936 யூனிட்களின் ஒட்டுமொத்த விற்பனையைப் பதிவுசெய்துள்ளது. இது செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடும்போது 13% கூடுதல் வளர்ச்சி ஆகும்.

இதுவரை, சுசூகி (Suzuki) உள்நாட்டில் 83,798 யூனிட்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் உள்நாட்டு விற்பனையை விட 16% வளர்ச்சியாகும்.

Advertisment

இதற்கிடையில், சுசூகி மோட்டார்சைக்கிள் EVP-விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய விற்பனை செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த தேவாஷிஷ் ஹண்டா, "எங்கள் நேசத்துக்குரிய வாடிக்கையாளர்கள், மதிப்பிற்குரிய வணிகக் கூட்டாளர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள குழு உறுப்பினர்களின் முடிவில்லாத ஆதரவிற்காக நாங்கள் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இதற்கிடையில், சுசூகி தனது முதல் டீலர்ஷிப்பை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலனில் செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த சுசூகி ஆக்ஸஸ் 125சிசி ஸ்கூட்டிகள் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரத்துக்குள் கிடைக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment