/indian-express-tamil/media/media_files/2025/10/13/suzuki-vision-e-sky-concept-2025-10-13-19-41-42.jpg)
சுஸுகி நிறுவனம் விஷன் இ-ஸ்கை பி.இ.வி (Vision e-Sky BEV) கருத்துரு, 270 கி.மீட்டருக்கும் அதிகமான ஓட்டும் தூரத்தை வழங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது, இது நகரப் பயணத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும். Photograph: (Image: Suzuki)
ஜப்பானின் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ள ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025-ல் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே இ-ஸ்கை பி.இ.வி (Vision e-Sky BEV) கான்செப்டை (கருத்துரு) வெளியிட்டுள்ளது. மலிவு விலையில், சிறிய அளவிலான எதிர்கால மின்சார வாகனம் குறித்த இந்நிறுவனத்தின் பார்வையை இந்த கருத்துரு உலகுக்குக் காட்டினாலும், இது அடுத்த தலைமுறை வேகன்-ஆர் மின்சார வாகன (இ.வி. - EV) மாடலின் முன்னோட்டமா என்று இந்தியாவில் பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்தியாவில் இ விடாரா (e Vitara) மாடல் 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இ.வி சந்தையை மெதுவாகவும் சீராகவும் கைப்பற்ற மாருதி சுஸுகி அதிக விலைகுறைந்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதைக் பரிசீலிப்பதாகத் தொழில்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்.ஜி போன்ற போட்டியாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் நுழைவு நிலை மின்சார ஹேட்ச்பேக்குகளை விற்று வரும் நிலையில், மாருதியின் அடுத்த இ.வி நுழைவு நிலைப் பிரிவை (entry-level segment) இலக்காகக் கொண்டு நிலைநிறுத்தப்படலாம். இ-ஸ்கை பி.இ.வி கான்செப்ட், நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான முன்னோட்டத்தை வழங்கக்கூடும்.
சுஸுகி இ-ஸ்கை பி.இ.வி கான்செப்ட் எதிர்கால வேகன்-ஆர் இ.வி?
விஷன் இ-ஸ்கை (Vision e-Sky) என்பது முற்றிலும் இ.வி-க்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கான்செப்ட். இது பழக்கமான 'டால்-பாய்' (உயரமான) வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது பயணிகளுக்குத் தலைக்கு மேலே அதிக இடம் இருக்கும் என்பதைக் காட்டுகிறது - இது வேகன்-ஆர் மாடலின் ஒரு தனிச்சிறப்பாகும். இது தட்டையான முன்பகுதி மற்றும் பின்பகுதியைக் கொண்டுள்ளது, இதனால் உட்புற இடவசதி அதன் சிறிய அளவிலேயே அதிகபட்சமாக்கப்படுகிறது.
அளவின் அடிப்படையில், இந்த கருத்துரு போட்டித்தன்மை வாய்ந்த அளவில் உள்ளது - இது 3,395 மிமீ நீளம், 1,475 மிமீ அகலம் மற்றும் 1,625 மிமீ உயரம் கொண்டது. இது தற்போதைய மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோவை விட உயரமாக இருந்தாலும், அதன் நீளமும் அகலமும் சற்று சிறியதாக உள்ளன. இது ஜப்பானிய கெய் கார் (கீ கார் - Kei car) விதிமுறைகளுடன் சரியாக இணங்குகிறது. அதே சமயம், இந்தியச் சந்தைக்கான, அதிக உள்ளூர்மயமாக்கப்பட்ட, சிறிய இ.வி கார் பற்றிய குறிப்பையும் இது வழங்குகிறது.
வடிவமைப்பின் சிறப்பம்சங்களில், மல்டி-அரே எல்.இ.டி லைட் பார், C- வடிவ DRL-கள் (பகல்நேர விளக்குகள்), மற்றும் காற்றின் வேகத்துக்குத் தகுந்த சக்கரங்கள் (aero-friendly wheels) கொண்ட ஒரு நவீனமான முகப்பைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் மாறுபட்ட வெள்ளை நிற கூரையுடன், ஒரு நவீன இரட்டை-நிறத் (two-tone) திட்டமும், பார்வைக்கு 'மிதக்கும்' சங்கி சி பில்லர்ஸ் (Chunky C-Pillars) இடம்பெற்றுள்ளது.
விஷன் இ-ஸ்கை (Vision e-Sky)-ன் உட்புறம் ஒரு வ்ராப்அரவுண்ட் (wraparound) வடிவமைப்பை மையமாகக் கொண்டது. இது ஒருங்கிணைந்த பல-செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு சதுர வடிவிலான ஸ்டீயரிங் சக்கரத்தைக் கொண்டுள்ளது. ஓட்டுநர்கள் இரட்டை டிஜிட்டல் திரைகள் மூலம் தகவல்களைப் பெறுகின்றனர். டாஷ்போர்டு ஒரு மிதக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் டிரைவ் செலக்டர் (கியர் செலக்டர்) பிரதான கன்சோலுக்குக் கீழே வசதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது – இது மாருதி ரிட்ஸின் டாஷ்-மவுண்டட் கியர் ஸ்டிக்கைப் போன்ற ஒரு வடிவமைப்பு.
இது எதிர்காலத்திற்கான இ.வி என்பதால், முழுவதும் சுழலும் அம்பியன்ட் எல்.இ.டி லைட் ஸ்ட்ரிப்களை நீங்கள் பார்க்க முடியும்.
இது எலக்ட்ரிக் வேகன்-ஆர்-ஆக அறிமுகமாகுமா?
தொழில்நுட்ப விவரங்கள் குறைவாக இருந்தாலும், விஷன் இ-ஸ்கை பி.இ.வி (Vision e-Sky BEV) கான்செப்ட் 270 கி.மீட்டருக்கும் அதிகமான ஓட்டும் தூரத்தை வழங்குவதாக சுஸுகி உறுதிப்படுத்தியுள்ளது, இது நகரப் பயணத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும்.
இந்த கருத்துருவின் உற்பத்திப் பதிப்பு 2026 ஆம் நிதியாண்டில் உலகளவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, Tiago EV மற்றும் MG Comet EV ஆகியவற்றைச் சமாளிப்பதற்காக மாருதி சுஸுகி உருவாக்கும், அதிக உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் குறைந்த விலையுள்ள மின்சார ஹேட்ச்பேக்கின் முன்னோட்டமாக இந்தக் கருத்துரு வலுவாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us