Advertisment

Syndicate Bank News : ஜூலை 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் புதிய அம்சம் என்ன தெரியுமா?

NEFT / RTGS / IMPS போன்ற பணப் பரிமாற்றங்களுக்கு CNRB என்று துவங்கும் ஐ.எஃப்.எஸ்.சி. கோடுகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி வலியுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Syndicate bank, IFSC code, Canara bank

Syndicate Bank News : கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி அன்று சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைந்தது. வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஐ.எஃப்.எஸ்.சி. கோடுகளில் மாற்றம் ஏதும் இல்லாமல் அப்படியே தொடர்ந்து இயங்கி வந்தது. இந்நிலையில் பழைய ஐ.எஃப்.எஸ்.சி கோடுகள் வருகின்ற 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

புதிய ஐ.எஃப்.எஸ்.ஐ கோடுகள் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தங்கள் வங்கிக் கிளைகளின் ஐ.எஃப்.எஸ். ஐ மற்றும் எம்.ஐ.சி.ஆர். கோடுகளை முதலிலேயே தெரிந்து வைத்துக் கொண்டால் பணப்பறிமாற்றத்தின் போது தேவையற்ற சிக்கல்களில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

SYNB என துவங்கும் ஐ.எஃப்.எஸ்.சி. கோடுகள் இனிமேல் புழக்கத்தில் இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் வாடிக்கையாளர்கள். NEFT / RTGS / IMPS போன்ற பணப் பரிமாற்றங்களுக்கு CNRB என்று துவங்கும் ஐ.எஃப்.எஸ்.சி. கோடுகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி வலியுறுத்தியுள்ளது.

http://www.canarabank.com/ என்ற இணையதளத்திற்கு சென்று புதிய ஐ.எஃப்.எஸ்.சி. மற்றும் எம்.ஐ.சி.ஆர். கோடுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இணையத்தில் KIND ATTN eSYNDIATE CUSTOMERS: KNOW YOUR NEW IFSC என்ற டிக்கரை க்ளிக் செய்து உள்ளே செல்லவும் அல்லது கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் உதவி மையத்திற்கு 18004250018 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment