scorecardresearch

அவசரமா தேவைப்படுதா? இ- ஆதார் டவுன்லோட் பண்ண தெரிஞ்சுக்கோங்க!

உங்கள் ஆதார் கார்டு தொலைந்தாலோ அல்லது வேறு அடிப்படை தேவைக்கு ஆதார் அட்டை தேவைப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?.

ஆதார் அட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இந்திய குடிமகன் அனைவருக்கும் 12 இலக்கு நபர்கள் கொண்ட அடையாள எண் ஆதார் அட்டை மூலம் வழங்கப்பட்டுள்ளது. நமது செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு தொடங்குவது வரை ஆதார் அட்டை ஒரு இன்றியமையாக அடிப்படை ஆவணமாக பார்க்கப்படுகிறது.

உங்கள் ஆதார் கார்டு தொலைந்தாலோ அல்லது வேறு அடிப்படை தேவைக்கு ஆதார் அட்டை தேவைப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. மிகவும் எளிய வழியில் இ- ஆதார் அட்டையை டவுண்லோட் செய்து கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

1)   https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2)   ஆதார் நம்பர்  “Aadhaar Number”  என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்

3)   12 இலக்கு ஆதார் எண் மற்றும் செக்கியூரிட்டு கோர்டை-பதிவு செய்யவும். பின்பு ’Send OTP’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

4)   தற்போது உங்கள் செல்போனுக்கு வந்த ஓடிபி-யை (OTP) பதிவு செய்து “Verify And Download” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

5)   தற்போது பாதுகாக்கப்பட்ட பிடிஎப் (pdf) ஆவணம் உங்கள் டவுண்டேஸில் பதிவிறக்கப்படிருக்கும்.

6)   தற்போது அதை திறந்து 8 இலக்கு பாஸ்வர்டை பதிவு செய்ய வேண்டும். உங்களது பெயரின் முதல் நான்கு எழுத்துகள் கேப்பிட்டல் லெட்டரிலும் பின்பு பிறந்த தேதியை கொண்டதாக பாஸ்சர்டு அமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது உங்கள் 12 இலக்கு ஆதார் எண் மறந்து போனால் எப்படி இ- ஆதாரை டவுண்லோட் செய்வது என்பதை பார்க்கலாம்.

1)   https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2)   உங்களது முழுப் பெயர் அல்லது இ-மெயில் ஐடி அல்லது மொபைல் எண் மற்றும் செக்யூரிட்டி கோர்டை பதிவு செய்யவும்

3)   ’Send OTP’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

4)   தற்போது உங்கள் செல்போனுக்கு வந்தடைந்த ஓடிபியை(otp) பதிவு செய்த பிறகு “Verify OTP” என்ற ஆப்ஷனை பதிவு செய்யவும்.

5)   தற்போது உங்கள் மொபைலுக்கு 12 இலக்கு ஆதார் எண் அனுப்பப்பட்டுள்ளது என்ற செய்தி கணினித் திரையில் தோன்றும்.

6)   தற்போது 12 இலக்கு ஆதார் எண்களை வைத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட 6 படிகளை பின்பற்றி இ – ஆதரை பதிவிறக்கம் செய்யலாம்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Tamil aadhar card how to download easy way update in tamil

Best of Express