Tamil Business Update : மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (டிஏ) உயர்த்த மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏற்கனவே 28 சதவீதம் உயர்வு அமல்படுதப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கைகள் அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவெ 17 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்த 28 சதவீதத்தை தற்போது மேலும் 3 சதவிகிதம் அதிகரித்து 31 சதவிகிதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் அகவிலைப்படி மட்டுமல்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த சம்பளமும் உயரும். அகவிலைப்படி கடந்த ஜனவரி 2020-ல் மத்திய அரசு 4 சதவிகிதம் உயர்த்தியது, இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் 3 சதவிகிதமும், நடப்பு ஆண்டு ஜனவரியில், மேலும் 4 சதவிகிதம் அதிகரித்தது, 17 சதவிகிதமாக இருந்தது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் மேலும் 11 சதவிகித உயர்த்தப்பட்டதை தொடர்ந்து 28 சதவிகிதத்தில் உள்ளது. இதில் ஜூன் 2021 டிஏ உயர்வு இன்னும் இறுதி இறுதி செய்யப்படாத நிலையில், ஏஐசிபிஐ ஜூன் தரவு மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி 1, முதல் ஜூன் 30, 2021 வரையிலான காலத்திற்கு எந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் அரசாங்கம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி விகிதங்களில் மாற்றங்களுடன், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் இந்தியா முழுவதும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். முன்னதாக, அதன் ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் முயற்சியில், மத்திய அரசு மாறுபடும் அகவிலைப்படியை உயர்த்தியது, இதன்படி மாதத்திற்கு ரூ. 105 முதல் ரூ. 210 வரம்பில் உயர்வு இருந்தது.
கடந்த ஏப்ரல் 2021 முதல் நடைமுறைக்கு இந்த விகிதங்கள் மூலம் சுமார் 1.5 கோடி தொழிலாளர்களுக்கு பயன்தரும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணஙகளால் சுமார் 18 மாதங்களுக்கு அகவிலைப்படி செலுத்துவதில் தற்காலிக முடக்கம் ஏற்பட்டது. மத்திய அரசின் இந்த புதிய உயர்வை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் தங்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதங்களை அதிகரித்தன.
நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவுத் துறை, மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளுக்கான ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) திருத்தப்பட்ட விகிதங்கள் குறித்து ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30 2021 வரையிலான காலப்பகுதிக்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிலுவைத் தொகை இருக்காது என்று துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் 2020, ஜூன் 30, 2021 வரை, 5 வது மற்றும் 6 வது ஊதியக்குழு ஆகிய இரண்டிற்கும் மாறாமல் இருக்கும். 5 வது சம்பள கமிஷனின் கீழ் ஊழியர்கள் தொடர்ந்து 312 சதவிகிதம் பெறும் என்றும், 6 வது சம்பள கமிஷனின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்கள் 164 சதவிகிதம் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.