இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊழியர்களின் வைப்பு நிதி இணைக்கப்பட்ட காப்பீட்டு (ஈ.டி.எல்.ஐ) திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் மரண காப்பீட்டு சலுகைகளை உயர்த்தப்படுவதாக ஓய்வூதிய நிதி மேலாளர் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு வர்த்தமானி அறிவிப்பில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ), குறைந்த பட்சம் 2 லட்சம் மற்றும் அதிகபட்சம் 6 லட்சமாக இருந்த மரண காப்பீடு தற்போது குறைந்த பட்சம் 2.5 லட்சமாகவும் அதிகபட்சமாக 7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஈ.டி.எல்.ஐ சந்தாதாரர் வேலையில் இருக்கும்போது இறந்துவிட்டால், சந்தாதாரரின் குடும்பத்திற்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஈ.பி.எஃப்.ஓ (EPFO) இன் 50 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களில், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் ஈ.டி.எல்.ஐ சந்தாதாரர்களாக உள்ளனர். மேலும் இந்த சலுகை 2020 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாக இந்த்தாகவும், இதில் உத்தரவாத நன்மை இரண்டு லட்சம் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும்" என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டு சலுகையின் குறைந்த வரம்பு 2020 பிப்ரவரி 15 முதல் மீண்டும் செயல்படுகிறது. “இரண்டாவது விதிமுறையில், ஆறு லட்சம் ரூபாய் என்ற என்ன தொகை தற்போது, ஏழு லட்சம் ரூபாய் என்று மாற்றப்படுவதாக தொழிலாளர் செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வர்த்தமானி அறிவிப்பின்படி, மத்திய தொழிலாளர் அமைச்சகம் குறைந்தபட்ச இறப்பு காப்பீட்டை 2018 ஆம் ஆண்டில் 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தியது, ஆனால் இந்த சலுகை இரணடு ஆண்டுகளுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டதால், 14 பிப்ரவரி 2020 அன்று இந்த திட்டம் காலாவதியானது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய திருத்தம் மற்றும் அறிவிப்பு தொடர அனுமதிக்கும் முந்தைய முடிவின், இப்போது ஈ.பி.எஃப்.ஓ (EPFO) வாரியத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேல் வரம்பு முதல்முறையாக செய்யப்படுவதால் பலருக்கு பயனளிக்கும்.
“தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இந்திய அரசின் வீடியோ அறிவிப்பு… பிப்ரவரி 15, 2018 தேதியிட்ட இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதில் குறைந்தபட்ச உத்தரவாத பயன் உச்சவரம்பு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளில்,( 2020 பிப்ரவரி 14 ஆம் தேதி ) இந்த அறிவிப்பு காலாவதியானது. ஆனால் தற்போது ஊழியர்களுக்கு இந்த ந்னமையை தொடர்ச்சியைக் கொடுக்கும் நோக்கத்திற்காக, இந்த திருத்தத் திட்டத்தின் 2 வது பத்தியின் உட்பிரிவு (பி) இன் துணைப்பிரிவு (iv) 2020 பிப்ரவரி 15 ஆம் தேதி புதிய திட்டம்செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்து.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil